H3N2 flu outbreak in India: கொரோனா போன்று வேகமாக பரவும் வைரஸ் எச்3என்2 ; முதியவர்களுக்கு எச்சரிக்கை!!
டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்டவர்களின் நீர்த்துளிகள் மற்றும் வைரஸ் பிறழ்வுகள் அல்லது திரிபு மூலம் பரவி வருகிறது என்று கூறியுள்ளார்.
தற்போது ஹோலி போன்ற பண்டிகை நாட்கள் வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், பல்வேறு சிகிச்சைகளுக்கு மருத்துவம் பார்த்து வரும் முதியவர்கள் எச்காரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவல்:
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா அளித்திருக்கும் பேட்டியில், ''காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் மூக்கில் சளி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். வைரஸ் பிறழ்ந்து பரவி வருவதாலும். இதை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி மக்களிடம் இல்லாத காரணத்தாலும், தொற்று நோய் அதிகமாக பரவி வருகிறது.
"எச்1என்1 காரணமாக தொற்று நோய் காலத்தில் நோய் பரவால் இருந்தது. அந்த வைரஸ் திரிபு இப்போது எச்3என்2 ஆக உள்ளது. எனவே, இது ஒரு சாதாரண இன்ஃப்ளூயன்ஸா திரிபு. ஆனால் வைரஸ் சிறிது சிறிதாக மாற்றமடைவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை நாம் பார்க்க முடிகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் எளிதில் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வைரஸ் திரிபு ஏற்படுகிறது. H3N2 வைரஸ் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குடும்பத்தில் இருந்து வருகிறது. இது அதன் பல்வேறு துணை வகைகளைப் பொறுத்து மாறுகிறது. ஆன்டிஜெனிக் டிரிஃப்ட் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வைரஸில் சிறிதளவு திரிபு ஏற்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பு முறைகள்:
இரண்டு விஷயங்களால் நோய் தொற்று வேகமாக அதிகரிக்கலாம் என்று ரன்தீப் தெரிவித்துள்ளார். நடப்பு பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும், கோவிட் தொர்ருக்குப் பின்னர் மக்கள் நெரிசலான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால், தொற்று வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், ஒருவர் மற்றொருவரிடம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதிக ஆபத்துள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி உள்ளது.
ஹோலி கொண்டாடலாம். அதேசமயம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீண்டகால சுவாச நோய்கள், இதயப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள் அல்லது டயாலிசிஸ் செய்துகொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.