Asianet News TamilAsianet News Tamil

கொழுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்…

infections caused-by-fats-and-solutions
Author
First Published Dec 9, 2016, 12:37 PM IST


கொலஸ்டிரால் பாதிப்பால் அவதிபடுவோர் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே செல்கின்றது என்று ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிகின்றது. அதுவும் இந்தியாவில் தான் இந்த கொழுப்பு நோய் பாதிப்பு அதிகம் என்று தெரிவிக்கின்றது.

சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டாலே உடன்  பிறப்புக்களான ரத்த அழுத்தம் (Blood Pressure), கொழுப்பு போன்றவையும் பின் தொடர்ந்து வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

கொழுப்பு என்றால் என்ன?

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, ரத்த நாளங்களின் சுற்றளவை குறைத்து இதயத்திற்கு ஊறு விளைவிப்பவை தான்  கொழுப்பு எனப்படும்.நம் உணவு பழக்க வழக்கத்தினால் நம் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஈரல் 75 சதவீதமும்,  25 சதவீதம், உணவின் மூலமும், சாதாரணமாக பெறுகின்றது. உடலுக்கு தேவையானது போக எஞ்சிய நிலையிலுள்ள கொழுப்பு ரத்த நாளங்களில் படிந்து உடலுக்கு கேடு விளைவிக்கின்றது.

இரத்த பரிசோதனை

உடலிலுள்ள கொழுப்பின் அளவை கணக்கிட ரத்த பரிசோதனையின் மூலம் அறியலாம். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 2 வருடத்திற்கு ஒரு முறையேனும் ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை கண்டறிவது நல்லது. காலையில் உணவு அருந்தும் முன்பு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யவேண்டும். அப்போதுதான் உடலிலுள்ள கொழுப்பின் அளவை கணக்கிடமுடியும்.இதன் மூலம் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் டிரைக்கிளிஸ் (triglycericles),மொத்த கொழுப்பின் அளவு,  VLDL, Cholesterol/HDL Ratio அளவுகளை கணக்கிட முடியும்.

நல்ல கொழுப்பு என்றால் என்ன?

HDL என்பது நல்ல கொழுப்பு வகையை சேர்ந்தது அதை ஆங்கிலத்தில் HDL(ஹைடென் சிட்டி லிப்போ புரோட்டின்) என்று கூறுவர். இது ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பு படிவதை  தடுக்கிறது. இதன் அளவு குறையும் போது இதய நோய் வர வாய்ப்பு உள்ளது. நல்ல கொழுப்பு என்பது 40 க்கும் 60 க்கும் இடைப்பட்ட அளவுகளில் இருக்கவேண்டும். இதன் அளவுகளிலிருந்து கூடவோ/குறையவோ கூடாது.

மூச்சு பயிற்சியின்  மூலம் குறிப்பிட்ட அளவு நல்ல கொழுப்பை பெறலாம். குறைந்தது  30 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்வதாலும் கெட்ட கொலஸ்டிரால் குறைந்து நல்ல கொழுப்பை அதிகரிக்கசெய்யலாம்.

கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

LDL என்பது கெட்ட கொழுப்பு வகையை சேர்ந்தது அதை ஆங்கிலத்தில் LDL(லோடென்சிட்டி லிப்போபுரோட்டின்ஸ்) என்று கூறுவர். இது ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகின்றது.இதன் அளவு 100க்கும் குறைவாக இருக்கவேண்டும். இதன் அளவுகளிலிருந்து கூடினால் ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும்.

கெட்ட கொழுப்பை குறைக்க நார்சத்து உணவுகளை சாப்பிடவேண்டும். நவதானிய வகைகள், ஓட்ஸ், பழங்கள், காய்ந்த  பழங்கள்,  காய்கறிகள், ஓமோகா 3 போன்றவற்றில் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது.

டிரை கிளிசரீஸ்(Triglycerides)  என்றால் என்ன?

உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹாலை டிரை கிளிசரீசாக

(Triglycerides) மாற்றி  கொழுப்பாக உடலில் சேர்கிறது. அதிகமான  எடை உடையவர்களுக்கு டிரை கிளிசரீன் அளவு கூடும்.இதன் அளவு 150 க்கும் குறைவாக இருக்கவேண்டும். அதிகமாக இருந்தால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வரும வாய்ப்பு ஏற்படும்.

VLDL (Very-low-density lipoprotein) cholesterol என்றால் என்ன?

வெரி லோ டென்சிட்டி லிப்போப்ரோட்டீன்(VLDL)  கொழுப்பு இதயத்தில் உற்பத்தியாகி ரத்த நாளங்கள் வழியாக உடல் தசைகளுக்கு செல்கிறது.  VLDL கொழுப்பின் அளவு 30 mg/deciliter க்கும் குறைவாக இருக்கவேண்டும். VLDL மற்றும் LDLஅளவை குறைக்க வேண்டுமெனில் முறையான உடற்பயிற்சி செய்யவேண்டும் மற்றும் இனிப்பு வகையறாக்களை தவிர்க்கவேண்டும்

TOTAL Cholesterol:டோட்டல் கொலஸ்டிரால் என்பது என்ன?

HDL, LDL & VLDL ஆகிய மூன்றும் சேர்ந்ததே டோட்டல் கொலஸ்டிரால் எனப்படும். இதன் அளவு 150 க்கும் 250 க்கும் இடைப்பட்ட அளவுகளில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால்  பக்கவாதம், இதயநோய்,  மற்றும்  மாரடைப்பு, போன்றவை ஏற்படும்

கீழுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் கொழுப்பின் அளவு கட்டுக்குள்  வரும்.

ஆளி விதை, மீன் எண்ணெய், வெந்தயம், கடுக்காய், ஓட்ஸ் போன்றவற்றை உணவுடன் உட்கொள்ள வேண்டும். கிரீன் டீ, பீன்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய் போன்றவையும் உட்கொள்ளலாம். கொதிக்க வைத்த மல்லி தூள் நீர், 2 சுட்ட வெள்ளை பூண்டு, காட்டு நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், தேன், மீன் எண்ணெய், சம்பா அரிசி, ஆலிவ் எண்ணெய். பீன்ஸ், ஆப்பிள் சீடர் வினிகர் 2 கரண்டி கலந்து சாப்பிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios