உங்கள் பத்தியத்தில் இந்த கீரையை சேர்த்துப் பாருங்க- அற்புதம் நடக்கும் நம்புங்க..!!
முள்ளங்கி, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் தான் அருகுலா. இது உடலில் புற்றுநோயை வரவழைக்கக்கூடிய செல் அணுக்களை அழித்துவிடுகிறது. ஏதாவது நாள்பட்ட பிரச்னையால் அவதியுற்று வந்து, அதற்காக மருந்து எடுத்துக் கொண்டு வருபவர்கள் அருகுலாவை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனையை பெறுவது முக்கியம்.
ஆங்கிலத்தில் அருகுலாவை ராக்கெட் இலைகள் என்று குறிப்பிடுகின்றனர். தமிழில் ஒருசிலர் இதை மிளகுக் கீரை என்கிறனர். ஆனால் அது தவறு. மிளகுக் கீரை என்பது புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமே அது கிடைக்கும். தமிழில் அருகுலா என்றே குறிப்பிடப்படுகிறது. இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த தாவரத்தில் நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கே, ஏ உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இந்த கீரையைப் பற்றி மேலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் இல்லாதது
அருகுலா கீரையில் கலோரிகள் கிடையாது. இதை தொடர்ந்து உட்கொண்டு வருபவர்களுக்கு விரைவாக உடல் எடை குறையும். இந்த கீரையை வெறும் 100 கிராம் எடுத்துக் கொண்டால், உங்களுடைய உடலில் இருந்து 25 கலோரிகள் வெளியேற்றும். இதனால் உடல் எடையால் துன்பப்பட்டு வருவோர், அருகுலாவை சாப்பிட்டு வருவதன் மூலம் விரைவாக விரும்பும் நிலைக்கு மாறுவார்கள்.
உடலுக்கு 7 மணிநேரம் தூக்கம் அவசியம்- ஏன் தெரியுமா?
இருதய நலனுக்கு நன்மை
இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் இருதயத்துக்கான ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். ஒருவேளை ரத்தம் ஓட்டம் அதிகரித்தாலும், அது இருதயத்தை பலப்படுத்துகிறது. பெரிய அளவிலான அருகலா இலைகளில் வைட்டமின் கே ஊட்டச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. இது இருதய நலனுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒன்று. இதன்மூலம் இருதய நலன் ஒட்டுமொத்தமாக மேம்படுகிறது.
கண் விழித்திரைக்கு கவசம்
அருகுலா இலைகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ , கண்ணுக்கு ஆரோக்கியத்தையும் விழித்திரைக்கு கவசமாகவும் செயல்படுகின்றன. இவ்விரண்டு ஊட்டச்சத்துகளும் பார்வையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்காரணமாக பார்வைக் குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. அருகுலாவில் இயற்கையாகவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கண்புரை உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
சக்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!
நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறுகிறது
அருகுலாவில் இருக்கும் வைட்டமின் சியின் அளவு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் பலப்படுத்துகிறது மற்றும் பல்வேறு வைரஸ்கள், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உங்கள் உணவில் இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருசில ஆய்வுகளில் இது உடலில் கேன்சர் பாதிப்புகளை உருவாக்கக் கூடிய செல்களை அழிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.