உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரும் உடம்பில் பலம் பெருகும்.

பகல் உணவுக்குப் பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால் செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும்.

பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும்.

கொட்டையை நீக்கிய சதையுடன், மிளகாய் உப்புச்சேர்த்து அரைத்து உலர்த்தி வைத்துக்கொண்டு. ஒரு கடுக்காய் அளவு காலையில் சாப்பிட்டால், பித்த வாந்தியுடன் ருசி இன்மையும் நீங்கும்.

நன்கு பசி உண்டாகும்.

ஒரு அவுன்ஸ் இலந்தைப் பழத்திலுள்ள சத்துக்கள்: 

வைட்டமின் ஏ-20 மி .கிராம்

சுண்ணாம்புச்சத்து 3 மி. கிராம்.

இரும்புச் சத்து 0.8 மி. கிராம்.

கலோரி மதிப்பு 16 .