Asianet News TamilAsianet News Tamil

நாக்கில் வெள்ளை படிதல் இருந்தால் உங்கள் உடல் நிலைமை அவ்வளவு மோசம் என்று அர்த்தம்...

If your tongue has a white deposit that means your physical condition is so bad ...
If your tongue has a white deposit that means your physical condition is so bad ...
Author
First Published Apr 28, 2018, 12:30 PM IST


சிலரது நாக்கில் வெள்ளை படிதல் அல்லது புள்ளிகள் போன்று எப்போதும் ஓர் படிமம் படர்ந்திருக்கும். 

நிறைய பேர் நாக்கில் வறட்சி ஏற்படும் போது, இது போன்று வெள்ளை படிதல் ஏற்படுவதை எதிர்கொள்கின்றனர். இது ஒரு வகையில் வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டாக்க கூடியது. வாய்விட்டு சிரிக்க முடியாது. அசிங்கமாக தெரியும். மேலும், இதற்கு தீர்வே இல்லையா என புலம்பும் நபர்களும் இருக்கிறார்கள்.

சிலர் இதை தினமும் காலை எழுந்து நாவை சுத்தப்படுத்தும் டங் கிளீனரை பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் இதை பற்றி பெரிதாய் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்.

சில சமயங்களில் இது விபரீதமான நோய் தாக்கங்களுக்கான அறிகுறி. உங்கள் உணவு அல்லது அன்றாட தீய பழக்கவழக்கங்களின் காரணமாக உங்கள் உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவின் அறிகுறிதான் நாக்கில் வெள்ளை படிதல்.

ஏன் ஏற்படுகிறது? 

நீர்வறட்சி, மருந்துகள், நாக்கு அழற்சி, கேண்டிடா ஈஸ்ட் தொற்று, மது, புகை, காரமான உணவுகள், வாய் ஆரோக்கியம் (சரியாக பல் துலக்காமல், வாய் கொப்பளிக்காமல் இருப்பது), நாக்கு வறட்சி போன்றவை காரணம்.

தீர்வுகள்...

உப்பு!

உப்பை நீரில் கலந்து வாய் கொப்பளித்து வாருங்கள். மேலும், பல் துலக்கும் போதும் பற்பொடியில் உப்பு கலந்து பல் துலக்கி வந்தால் இதற்கு நல்ல தீர்வு காண முடியும்.

கிளிசரின்! 

கிளிசரின் ஓர் மென்மையான தன்மை கொண்ட இயற்கை பொருள், இது நாக்கில் வெள்ளை படிதலை போக்க உதவுகிறது. கிளிசரினை பயன்படுத்துவதால் நாக்கில் வெள்ளை படிதலை மட்டுமின்றி, பற்களையும் வெள்ளையாக்க உதவுகிறது.

ஆசிடோபிலஸ்! 

இது பொருள், நாக்கின் மேல் ஓர் கோட்டிங் போல இருந்து வெள்ளை படிதலை தடுக்கிறது. இது ஒரு புரோபயாடிக்.

செய்ய வேண்டியவை!

1.தினமும் மறக்காமல் பல் துலக்க வேண்டும்.

2.வாய் கொப்பளிக்க வேண்டும்.

3.நாக்கை டங் கிளீனர் அல்லது விரல்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

4.மது அருந்திய பிறகு, புகை பிடித்த பிறகு வாய் கழுவ வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios