If you use these two types of herbs you can remove all the problems associated with breathing ...

அ.. அதிமதுரம்

இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம். மருத்துவப் பயனாகும் தண்டு உலர்ந்த நிலையில் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். 

சளி இருமல் ஆகியவற்றுக்கான மருந்தாகப் பயன்படுகிறது. புண்ணழுகல் ஆற்றுதல், சளியகற்றுதல், வெப்பகற்றல், பித்தநீர் பெருக்கல், எரிச்சலூட்டல், குருதிப்போக்கு அடக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. 1 அல்லது 2 கிராம் அத்மதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

2. அத்மதுரப் பொடி, சந்தணத்துள் சமன் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும். அக உறுப்புகளில் புண் ஆறும்.

ஆ.. அக்கரகாரம்

மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். 

தொண்டையில் நோய்த்தொற்று மூச்சிக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமில்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்சி வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும்.