If you use face mask like peach fruit
பீச் பழம்
பீச் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு அழகைத் தருவதிலும், முதுமை தோற்றம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
பீச் பழத்தில் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?
** வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 20 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை வராமல் இருக்கும். இதனை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
** பீச் பழத்தின் விதையை நீக்கி, முட்டையின் வெள்ளை கருவை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாக பளிச்சென்று பொலிவுறும்.
** பீச் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.
** நன்கு கனிந்த பீச் பழத்தை அரைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால், அதோடு சிறிது எலுமிச்சை சாற்றையும் ஊற்றிக் கொண்டு, முகத்திற்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்கும்.
