உங்களுக்கு டெங்கு இருக்கிறதா? என்பதை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று இரத்தப் பரிசோதனைச் செய்வதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

dengue fever க்கான பட முடிவு

1.. சோதனையில் உங்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானால் முதலில் அதிக பதற்றம் ஏற்படும். எனவே, முடிந்தவரை பதற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். அமைதியாக சிறுது நேரம் உட்கார்ந்து உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

2.. மருத்துவரை அணுகி அவர் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள். கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளை நேரத்திற்கு உண்டு வாருங்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது.

dengue fever க்கான பட முடிவு

3.. வேலைக்குச் செல்பராக இருந்தால்கூட லீவு போட்டுவிட்டு வீட்டில் நன்றாக ஓய்வெடுங்கள். நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்கள் அலுவலகமும் நன்றாக  இருக்கும். 

4.. டெங்கு வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். எனவே, நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

rest க்கான பட முடிவு

5.. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உங்களுக்கு உடல்நிலை மிகவும் மோசமானால் வீட்டில் இருந்து மருத்துவம் பார்ப்பதைவிட மருத்துவமனையில் அட்மிட் ஆவது சிறந்தது.

6.. மருத்துவரின் ஆலோசனையை ஏற்று தவறாமல் சிகிச்சை எடுத்து வந்தால் ஏழே நாள்களில் டெங்கு காய்ச்சல் ஓடிவிடும். 

admit in hospital க்கான பட முடிவு

7.. டெங்குவால் ஏற்படும் பாதிப்புகளான உடல்வலி, சோர்வு போன்றவை 14 நாள்களில் அதாவது இரண்டு வாரங்களில் தடம் தெரியாமல் போய்விடும்.