புளிச்சக்கீரை:

இந்த கீரையை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். மலச்சிக்கல், வாதநோய் மற்றும் சொறி சிரங்கு, புண்குணமாகும். பித்த தேகம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

பொன்னாங்கண்ணி கீரை:

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். உடல் உஷ்ணம் குறையும், இரத்தம் விருத்தியாகும்.

முளைக் கீரை:

நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண் நோய், வயிற்றுப்புண், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

சாணாக்கீரை:

மகோரதம் என்னும் வியாதியை பூரணமாக குணப்படுத்தும். இது குழிப்புண், ஆறாப்புண்களைக் கூட குணப்படுத்தும் சக்தியுள்ளது.

சிறுகசலைக் கீரை:

மலத்தை இளக்கி வெளியேற்றும். உடல் சூடு தணியும், சிறுநீர் சம்பந்தமான வியாதிகளைக் குணமாக்கும்.

ஆரைக் கீரை:

பித்த வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதைக் கட்டுப்படுத்தும். இரத்தப்பிரமேகம் என்னும் வியாதியைக் குணமாக்கும்.

அரைக்கீரை:

கண்சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

முருங்கைக் கீரை:

தாதுவை விருத்தி செய்யும். பால் கொடுக்கும் தாய்மார்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நன்றாக பால் சுரக்கும்.

வெந்தயக்கீரை:

ஜீரணச்சக்தியை உண்டாக்கும். உடல் பலம் தரும். அறிவைத் தெளிபடுத்தும், சுறுசுறுப்பு உண்டாகும்.

அகத்திக்கீரை:

மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும் குணமாக்கும்.

வல்லாரை:

காசநோய், ஈளை முதலியன அகலும். நினைவாற்றலைப் பெருகச் செய்யும்.

கரிசலாங்கண்ணிக் கீரை:

கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை புரிகிறது.