Asianet News TamilAsianet News Tamil

நீங்கள் சீரகத்தை இப்படியெல்லாம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் தீரும்...

If you eat cumin like this it will you cure these trouble ...
If you eat cumin like this it will you cure these trouble ...
Author
First Published Aug 18, 2017, 1:14 PM IST


1.. சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

2.. திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

3.. அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

4.. நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

5.. சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

6.. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

7.. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

8.. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

8.. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.

9.. சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

10.. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

11.. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

12.. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios