If you eat chocolates you can get good blood circulation
10 கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந்த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகியவற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்கலேட்டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப் ரிப்போர்ட்டை அளித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் தங்கள் உணவுப்பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள் உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதன் முதலாக இத்தகைய மருத்துவ கோரலுக்கு ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இது அவ்வளவு சுலபமல்ல. நம் நாடுகளில் லஞ்சம் கொடுத்தால் கிடைத்து விடும் அங்கு அது நடக்காது.
மரபான சாக்கலேட் தயாரிப்பு முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் அதிகாரபூர்வ விஞ்ஞான ஆய்வுகளிலும் சாக்கலேட் சாப்பிடுவதால் ஆரோக்கிய கேடு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளதோடு, சில அதிகாரபூர்வ ஆய்வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.
2500 மனுக்கள் தங்களது மருத்துவக் கோரல்களுக்காக ஐரோப்பிய யூனியனில் அளிக்கப்படுகிறது என்றால் 200 மனுக்களே ஏற்கப்படுகின்றன.
எனவே எந்த வித பயமும் இல்லாமல் சாக்கலேட் சாப்பிடலாம் என்கிறது ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம்!
