Asianet News TamilAsianet News Tamil

தினமும் ஒரு சாக்லெட் சாப்பிட்டால் இதயநோய் வராதாம்…

If you eat a chocolate heart varatam daily
if you-eat-a-chocolate-heart-varatam-daily
Author
First Published Mar 22, 2017, 1:11 PM IST


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சாக்லேட் தான் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால், அதுவும் அளவோடுதான் சாப்பிடனும்.

தினசரி சிறிதளவு சொக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.

சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது.

தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தால், இதய நோய் ஆபத்து 37 சதவீதம் குறைகிறது. 29 சதவீதம் பக்கவாத அபாயம் நீங்குகிறது.

எனினும், மாரடைப்பை தடுப்பதில் சொக்லேட்டுக்கு பங்கில்லை என்று தெரிந்தது.

பார், சாக்லேட், டிரிங்க், பிஸ்கெட், டெசர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும் சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை. ஏனெனில் கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன.

அதனை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயை தடுக்க உதவும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios