Asianet News TamilAsianet News Tamil

தினமும் திராட்சை சாறு குடித்துவந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமாம்…

If you drink everyday grape juice your heart will be healthy ...
If you drink everyday grape juice your heart will be healthy ...
Author
First Published Jul 31, 2017, 1:14 PM IST


பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் இப்பழத்தை சாறு எடுத்து குடித்தால் இப்பழத்தின் முழுச் சத்துக்களையும் பெறலாம்.

அதில் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.

1.. தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையை சாறு எடுத்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

2. திராட்சை சாறை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

3. திராட்சை சாறு உடலுன் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கபடும் சாறுக் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும்.

4. திராட்சை சாறு இரத்த அழுத்தத்தைத் கட்டுபடுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவைதான் காரணம். மேலும் திராட்சை சாறு இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

5. திராட்சை சாறு நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு உடல் எடை குறையும்.

6. திராட்சை சாறு சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

7. திராட்சை சாறு இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Follow Us:
Download App:
  • android
  • ios