தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும்.
இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும்.
ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சியையும் காணலாம்.
வெங்காய தண்ணீர்: ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். வெங்காயம் மென்மையானதும், நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
