Asianet News TamilAsianet News Tamil

வெள்ளம் போல் மக்களை தாக்கும் மெட்ராஸ் ஐ...பரவாமல் தடுப்பதற்கான வழிகள் இதோ..!!

மெட்ராஸ் ஐ நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் செய்ய கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

how to cure madras eye and symptoms in tamil in tamil
Author
First Published Sep 16, 2023, 2:03 PM IST

மெட்ராஸ் ஐ குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த அழற்சி நோய் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்றுநோய் என்பதால், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ஈசியாக பரவும். இந்நோய் காண மருந்துகளை நீங்கள் மருந்து கடைகளுக்கு சென்று வாங்கி போடலாம் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கியும் போடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் குணமடைவீர்கள்.

மெட்ராஸ் ஐ என்ற பெயர் எப்படி வந்தது?
1918 ஆம் ஆண்டு இந்த நோய் முதல் முதலில் சென்னையில் தான் கண்டுபிடிக்கப்பட்டதால் அன்றிலிருந்து இன்றுவரை மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது.

மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள்:
இந்நோயானது பருவநிலை மாற்றத்தால் வரும் வைரஸ் தொற்று ஆகும். கண் வலி , கண் சிவந்து இருப்பது, கண்களில் நீர் வருவது, கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி  அவை இமைப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும், கண்ணுக்குள் ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறியனாகும்.

தொற்று நோய்:
வீட்டில் இந்நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட நபரின் கண்களை மற்றவர் பார்க்கும் போது இந்நோய் அவருக்கும் பரவுகிறது. அது போல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

மெட்ராஸ் ஐ இருக்கும் நாள் எவ்வளவு?
இந்நோயானது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டுமே இருக்கும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய் வந்துவிட்டது என்று எண்ணி கவலைப்பட வேண்டாம்.

செய்ய வேண்டியவை:

  • இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சொட்டு மருந்துகளை முறையாக பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் நீங்கள் சுயமாக மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
  • இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்நோயிலிருந்து விரைவில் நீங்கள் குணமடைவீர்கள்.

இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க:

  • இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் அதிகமாக இடங்களுக்கு செல்லக்கூடாது. எனவே,பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • இந்நோயல் பாதிக்கப்பட்ட நபர் கண்களை அடிக்கடி நல்ல நீரில் கழுவ வேண்டும்.
  • இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டிவி, போன் போன்றவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Follow Us:
Download App:
  • android
  • ios