How to control fat with health method
தொப்பையை வேகமாக ஆரோக்கியமான முறையில் குறைக்க
அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதா? உடலமைப்பே மாறிவிட்டது என்று கவலையா? அசிங்கமாக தொப்பை தொங்கி காணப்படுகிறதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தொப்பை குறைந்தது போன்று தெரியவில்லையா?
உங்கள் தொப்பையை வேகமாகவும் ஆரோக்கியாமன முறையிலும் குறைக்க இதோ டிப்ஸ்...
1... ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புச் செல்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும்.
2.. இஞ்சி
இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறைய உதவி புரியும்.
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 1/2 கப்
இஞ்சி சாறு – 2 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார்.
குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி குறைந்தது 1 மாதம் குடித்து வந்தால், நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக இந்த பானத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.
