பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை
ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்.
இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தி சீரண சக்தியை கொடுக்கும்.
