கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தில் உள்ள அனைத்து பொருள்களும் பயன் தரக்கூடியது.

பதனீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் கருப்பட்டியில் 1.04 கிராம் புரோட்டின், 0.86 கிராம் சுண்ணாம்பு, 76.86 கிராம் சுக்ரோஸ் உள்ளது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கினை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அது நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இது அதிக சுவையுடன் ஏராளமான சத்துக்களை கொண்டது.

பனங்கிழங்கில் இருக்கும் மருத்துவ பயன்கள்...

** பனங்கிழங்கு குளிர்ச்சியினை தரக்கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும்.

** பனங்கிழங்கினை வேகவைத்து சிறுசிறு துண்டாக நறுக்கி கயவைத்து அதனுடன் கருப்பட்டியினை சேர்த்து இடித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்தானது கிடைக்கும்.

** இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடும் போது உடல் உறுப்புகள் பலம் பெறும். கர்ப்பப்பை பலம் பெறும்.

** பனங்கிழங்கு வாயு தொல்லையுடையதால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இதனை தவிர்க்கலாம்.

** பனங்கிழங்கில் நார்சத்தானது உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.

** பனங்கிழங்கினை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். நோய்களும் கட்டுப்படும்.

** பனங்கிழங்கினை பூமியில் இருந்து பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் தவின்னை சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி குணமாகும்.