Asianet News TamilAsianet News Tamil

கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் இதோ..

இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Here are some super foods that help lower cholesterol levels naturally Rya
Author
First Published Oct 27, 2023, 1:53 PM IST

நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். வாழ்க்கை முறை காரணிகள் உங்கள் இரத்த ஓட்டத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். அதிக உடல் இயக்கம் இல்லாத செயலற்ற வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் மற்றும் அதைத் தொடர்ந்து நாள்பட்ட நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர, கொலஸ்ட்ராலைச் சிறப்பாகச் சமாளிக்க ஒருவர் உணவை மாற்றியமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சில மூலிகைகள் ஆகியவற்றைச் சேர்ப்பது கொழுப்பைக் குறைக்க உதவும். 

உடலால் உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற பொருளான கொலஸ்ட்ரால் பல முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இருப்பினும், நாம் அதை அதிகமாக கொழுப்பு சேரும் போது, ​​அது உடலின் செயல்பாடுகளை பாதிக்க தொடங்குகிறது. எனவே இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பூண்டு

பூண்டில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும், இரத்தம் உறைவதைக் குறைப்பதற்கும் இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 12 வாரம் இரவில் பூண்டு பால் குடித்து வர நல்ல மாற்றத்தை பார்க்க முடியும். 

பார்லி

பார்லியில் ப்ரீபயாடிக் பீட்டா-குளுக்கன் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பார்லி கிச்சடி, பார்லி கஞ்சி, பார்லி சூப் மற்றும் பார்லி ரொட்டி போன்ற பல வடிவங்களில் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

திரிபலா

சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்தாக திரிபலா உள்ளது. ரத்தத்தை சீர்படுத்தவும், மாரடைப்பை தடுக்கவும் இது உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் அரு மருந்தாகவும் கருதப்படுகிறது. எனினும் இதை பயன்படுத்தும் முன், சித்த மருத்துவரின் அறிவுரையை பெறுவது அவசியம்.

மோர்

பாரம்பரிய முறையில் மோர் செய்து, அதனுடன் மஞ்சள் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி சேர்க்கவும். ஒவ்வொரு நாளும் ஒரு முறை சாப்பிடுங்கள், 3 மாதங்களுக்குப் பிறகு உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மேம்படுவதைக் காண முடியும்..

நெல்லிக்காய்

கொலஸ்ட்ராலுக்கு சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று நெல்லிக்காய். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நெல்லிக்காயில் நிறைந்துள்ளது. கொழுப்பை குறைக்க விரும்புவோர் தவறாமல் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

மற்றொரு கோவிட் பெருந்தொற்று ஆபத்து? இதுவரை பார்த்திராத 8 வைரஸ்கள் கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

எனினும் சீரான வாழ்க்கை முறை மற்றும் சமச்சீரான உணவு முறை இருந்தால் மட்டுமே இயற்கையாகவே கொழுப்பை குறைக்க மேற்கூறிய உணவுகள் உதவும். எனஏ சரியான தூக்கம், உடல் இயக்கம், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை வழக்கமாக செய்வதுடன் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios