Here are some simple ways to keep your eyes healthy and bright ...

ஒருவரது அழகை காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அத்தகைய கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொண்டால்தான் நமக்கு நல்லதும் கூட. 

கண்களை ஆரோக்கியமாகவும், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும் வழிகள். 

வழி #1

தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

வழி #2 
கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.

வழி #3 

சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்கள் நீங்கும்.

வழி #4 

தினமும் கண் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்.

வழி #5 

தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும்.

வழி #6 

உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும், கருவளையங்கள் நீங்கும்.