Healthy life dear friend gooseberry
நெல்லிக்கனி மழைக்காலங்களில் கிடைக்கும் ஓர் ஒப்பற்ற உணவு.
ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான தோழன் என்பதால் தான் நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுவர்.
நெல்லியை உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம்.
அருமையான கண் பார்வை தரும்.
காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது.
நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது.
வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம்.
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும்.
பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
