Health: உலர் திராட்சை - தம்மாதூண்டு தான் இருக்கு.... அதுல இவ்வளவு நன்மைகளா?
உலர்திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படும்.
திராட்சை பழத்துடன் ஒப்பிடும்போது உலர் திராட்சையில் அதைவிட அதிகமான சத்துக்களும் பலன்களும் இருக்கின்றன. உலர் திராட்சை சாப்பிடுவதனால் வயிற்று வலி, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள், மலச்சிக்கல், இரைப்பை, குடல் புண், வாய்ப் புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.
உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும், இதய துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை. அத்தகைய பொட்டாசியம் சத்து உலர்திராட்சையில் அதிகம் இருக்கிறது.
உலர்திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படும். தோல் நோய்களிலிருந்தும், ரத்தசோகை போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உலர்திராட்சை உதவுகிறது.
உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவுமாம். இப்படி ஏராளமான பலன்களையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உலர் திராட்சையை தினமும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.