Asianet News TamilAsianet News Tamil

அட! சிவப்பரிசியில் இத்தனை நன்மைகள் உள்ளதா? பார்க்கலாம் வாங்க!

அந்த வகையில், பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பரிசியின் நன்மைகள் பற்றி தான் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.
 

 Health Benefits of Red Rice in Tamil
Author
First Published Mar 19, 2023, 7:37 AM IST

நமது பார்மபரிய உணவு வகைகளில் அரிசி மிக முக்கியமான, இன்றியமையாத ஒரு தனித்துமான இடத்தை பெற்றுள்ளது. அரிசியில் எண்ணற்ற வகைகள் உள்ளன. கருப்பு அரிசி,கைக்குத்தல் அரிசி, மாப்பிள்ளை சம்பா,குடவாளை அரிசி என்று பல வகையான அரிசிகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

ஒவ்வொரு அரிசியும் தன்னகத்தே பல சிறப்பான தனித்துவமான சிறப்புகளை கொண்டிருக்கும். அந்த வகையில், பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பரிசியின் நன்மைகள் பற்றி தான் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

சிவப்பரிசியின் நன்மைகள்:

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்:

இன்று வயது பேதமின்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய டயாபடிஸ் எனப்படும் சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது.இது பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளும் தெரிவித்துள்ளன. அதாவது சிவப்பரிசியில் இருக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிவப்பிரிசியை அவர்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கும்:

சிவப்பு அரிசியில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால் ,இது ஆக்ஸிஜனை உறிஞ்சி நமது உடலில் இருக்கும் அனைத்து செல்கள் மற்றும் திசுக்களுக்கு அனுப்ப உதவுகிறது. நமது உடலில் ஆக்ஸிஜன் மேம்பட்ட நிலையில் உள்ள போது நமது மனநிலையும் மற்றும் ஆற்றலும் ஆகியவையும் திறன் பட செயல் ஆற்றுகிறது.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்:

சிவப்பு அரிசியில் காணப்படும் மெக்னீசியம் நுரையீரல் செயல்பாடுகளை சீரமைக்கும் தவிர உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை அதிகப்படுத்தி தானாகவே ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்:

சிவப்பு அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்களால் செரிமானம் சம்பந்தமான செயல்களை துரிதப்படுத்துகிறது.தவிர இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலில் இருக்கின்ற நச்சுகளை உடனே வெளியேற்றி, குடல் இயக்கத்தை சரி செய்கிறது.

இதய நோய்கள் வருவதை தடுக்கும்:

சிவப்பு அரிசியில் முழு தானியங்கள் காணப்படுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்கும் பணியை சிறப்பாக செய்கிறது. சிவப்பு அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய சம்மந்தமான பிரச்சைனைகள் வராமல் தடுக்கிறது.
 

மூட்டுவலியை மட்டுமில்ல முன்ஜென்ம வினைகளையும் போக்கக்கூடிய சக்தி இந்த ''பிரண்டைக்கு'' உண்டு என்று தெரியுமா!

உடல் சோர்வை குறைக்க உதவும்:

இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து இதர அரிசிகளுடன் ஒப்பிடுகையில் மிக சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக தான் உள்ளது. சிவப்பு அரிசியில் இருக்கும் தவிடு நீண்ட நேரம் வரை வயிறு நிறைவாக இருக்க செய்கிறது. இதனால் உடல் எப்போதும் உற்சாகமாக செயல்படுவதை உணர முடியும்.

உடல் எடையை குறைக்கும்:

சிவப்பிரிசியில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி தூண்டுதலை அதிகமாக கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது கட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் சிவப்பரிசியால் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் நல்ல ஒரு மாற்றத்தை விரைவில் காணலாம்.

சிவப்பரிசியில் என்னென்ன உணவுகள் செய்யலாம்:

சிவப்பரிசி புட்டு,

இடியாப்பம்,

சிவப்பரிசி சாம்பார் சதாம் ,

சிவப்பிரிசி காய்கறி சாதம்

மேலும் பல விதமானவெரைட்டி ரைஸ்கள் சிவப்பரிசியில் செய்து சாப்பிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios