Asianet News TamilAsianet News Tamil

Green Chilli: பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

நாம் அன்றாடம் சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும் பச்சை மிளகாய், பல்வேறு ஆரோக்கிய பலன்களை உடலுக்கு அள்ளிக் கொடுக்கிறது.

Health benefits of eating green chillies regularly!
Author
First Published Nov 23, 2022, 9:46 PM IST

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் தான், நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த வரிசையில் பச்சை மிளகாயும் ஒன்று. நாம் அன்றாடம் சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும் பச்சை மிளகாய், பல்வேறு ஆரோக்கிய பலன்களை உடலுக்கு அள்ளிக் கொடுக்கிறது.

பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. உணவில் பச்சை மிளகாயை சேர்க்கும் போது, நமக்கு மேற்கண்ட சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். சமைக்கும் நேரத்தில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்வதால், இது உணவிற்கு ஒருவித தனிசுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.

பச்சை மிளகாயின் நன்மைகள்

  • பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது. 
  • பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.
  • பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்.
  • பச்சை மிளகாயின் உயிர்வேதியியல் மற்றும் மருந்தியல் விளைவுகளில் ஒவ்வாமை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் தோல் செல்களின் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு போன்றவையும் அடங்கும். 
  • பச்சை மிளகாய், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இதனைத் தொடர்ந்து சாப்பிடும் போது மூட்டு வலியையும் குணப்படுத்தி விடும்.
  • பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிடுவதால், அல்சர் வராமல் தடுக்கப்படுகிறது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது. 
  • பச்சை மிளகாயை தொடர்ந்து சாப்பிடுவது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும். இவை உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுத்து, சமன்படுத்தவும் உதவுகிறது.
Follow Us:
Download App:
  • android
  • ios