Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு அதிகமாக எச்சில் சுரக்கிறதா? அது இந்த வியாதியின் அறிகுறியாக கூட இருக்கலாம்...

Having more spits he you have these problems
Having more spits he you have these problems
Author
First Published Mar 3, 2018, 12:49 PM IST



 
அதிகப்படியான எச்சில் :

உணவை சாப்பிட்டபின் அதிகப்படியான எச்சில் உங்களுக்கு சுரந்தால் அமில எதுகலிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு தலைவலி மற்றும் வாந்தி வருவதற்கு முன் மிக அதிகமாக எச்சில் சுரக்கும்.

நிமோனியா:

வயிற்றிலிருந்து மேலே தள்ளும் அமிலம் வாய் வழியாக மட்டும் வருவதில்லை. நுரையீரலையும் சில சமயங்களில் சென்றடையும். இதன் விளைவு நிமோனியா உருவாகும். ஆகவே உங்களுக்கு நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் காரணமாக இருக்கலாம்.

நெஞ்சு வலி :

நெஞ்சு வலி இதய பிரச்சனைகளால் மட்டும் வருவதில்லை. அமில சுரப்பு அதிகமாகும் போது வாயு உருவாவதும் அதிகமாகிறது. இது ரத்த தமனிகளில் அடைபடும்போது நெஞ்சு வலி போல் தோன்றுகிறது. எனவே நெஞ்சு வலி அமில எதுகலிப்பினாலும் வரலாம்.

கசப்பான சுவை :

உங்களுக்கு நாக்கில் கசப்பான சுவை எப்போதும் தெரிந்து கொண்டிருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் காரணமாக இருக்கலாம்.

அதிக மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா:

இரவில் படுக்கும்போது ஆஸ்துமா அல்லது மூச்சைரைப்பு அதிகம் இருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் ஒரு காரணம். ஏனென்றால் இரவில் படுக்கும்போதுதான் அதிக அமிலம் உணவுக் குழாயின் வழியாக பரவுகின்றன. இதன் காரணமாக சுவாசக் குழாயையும் பாதித்து சுவாச பாதிப்பை தருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios