முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.
ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும். மேலும் முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் இதனை சாப்பிட முடியாது.
ஏனென்றால் இதனை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். ஆனால் இதை சாப்பிட சில வழிகள் உள்ளன. இங்கு முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சத்துக்கள் முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
வைட்டமின் சி பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது என்றால் பாருங்களேன். எனவே இனிமேல் 5 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதில் ஒரு முந்திரிப்பழத்தை சாப்பிடுங்கள்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.
ஸ்கர்வி முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
24 மணிநேரம் முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.
சாப்பிடும் முறை முந்திரி பழத்தை சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாமல் இருக்க, அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்
முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்!
Latest Videos
