Asianet News TamilAsianet News Tamil

உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த ஹெல்த் ட்ரிங்க உங்க டயட்டில் சேர்த்துக்கங்க !

உடற் பயிற்சி மேற்கொள்வோர்  திணை பருத்தி பாலை தினமும் எடுத்துக் கொண்டால் ,உடல் சோர்வு அடையாமல் உறுதியாக வைத்துக் கொள்ள உதவும். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

Foxtail Cotton Seed Milk Recipe in Tamil
Author
First Published Mar 26, 2023, 3:58 PM IST

ஒருவரது ஆயுலானது முதல் பாதியில் பணம் சம்பாதிப்பதில் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் வருகிறது.இரண்டாவது பாதியில் ஆரோக்கியமற்ற உடல் நலத்தைச் சீர் செய்ய ,சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தை செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இம்மாதிரியான ஒரு சூழல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கும் வழி உள்ளது.

இம்மாதிரியான சூழல்களை தவிர்க்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகச் சிறந்த நன்மை பயக்கும். இப்போது உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக பல இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாகவும் , ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உடலும், மணமும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

ஆகையால் தினமும் உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். இப்படி உடற்பயிச்சி செய்பவர்கள் இந்த ஊட்டந்தரும் ஒரு ஹெல்த் ட்ரிங்க்கை அன்றாடம் உங்கள் டயட் சார்ட்டில் இருக்குமாறு செய்து கொள்ளுங்கள்!

உடற் பயிற்சி மேற்கொள்வோர் திணை பருத்தி பாலை தினமும் எடுத்துக் கொண்டால் ,உடல் சோர்வு அடையாமல் உறுதியாக வைத்துக் கொள்ள உதவும். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலை உறுதியாக வைக்க உதவுவதில் சிறுதானிய உணவுகள் தான் பெஸ்ட் சாய்ஸ். தவிர இது ஆரோக்கியமான உணவும் கூட திணையில் இருக்கும் மாவுச்சத்து அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான சக்தியை தருகிறது. தவிர திணையில் புரதச்சத்து மிகுந்து காணப்படுவதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த உணவாகும். வைத்து செய்யப்படும் அனைத்து உணவு வகைகளும் ஆரோக்கியமான உணவு தான். அந்த வகையில் இன்று நாம் திணை வைத்து சத்தான பருத்திப் பால் காணலாம்.

தேவையான பொருட்கள்:

திணை மாவு - 50 கிராம்
பருத்தி விதை - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் - சிறிது
சுக்குத் தூள் சிறிது

செய்முறை:

சுத்தமான பருத்தி விதைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 - 12 மணி நேரம் வரை ஊற வைத்து பின் அலசி தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு அதனை அரைத்து பால் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 2 அல்லது 3 முறை பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திணை மாவினை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து பின் அதில் வாடி பிழிந்து வைத்துள்ள பருத்திப் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பருத்தி பாலும், கருப்பட்டியும் சேர்ந்து நன்றாக கொதித்த பின், கரைத்து வைத்துள்ள திணை மாவினை சேர்த்து மிதமான தீயில் வைத்து கை விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். அவளோ தான் அனைத்தும் நன்றாக கலந்து திணை மாவின் பச்சை வாசனை சென்ற பிறகு அதனை இறக்கினால் சுவையான திணை கருப்பட்டி பருத்தி பால் ரெடி! விருப்ப பட்டால் துருவிய தேங்காயை சிறிது தூவி பரிமாறிலாம். இதனை தினமும் உடற்பயிற்சி செய்யும் முன் அரை மணி நேரத்திற்கு முன்பாக இதனை அருந்தி பின் உடற்பயிச்சி செய்தால் உடல் சோர்வு ஏறப்டாமல் இருக்கும்.

கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்று ஃபிர்னி ஃபலூடா செய்து சாப்பிடுங்க! எவ்ளோ செய்தாலும் பத்தவே பத்தாது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios