Asianet News TamilAsianet News Tamil

இந்த காரணத்தால்தான் நாம் மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடணும்...

For this reason we often eat mangoes ...
For this reason we often eat mangoes ...
Author
First Published Jun 28, 2018, 1:45 PM IST


மாம்பழ சீசனில் மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

** மாம்பழத்தில் உள்ள சத்துக்கள், நம் நரம்பு மண்டலத்தின் திசுக்களை உருவாக்கி, நோயெதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

** மாம்பழத்தில் உள்ள டயட்ரி ஃபைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

** மாம்பழத்தில் விட்டமின் A, பீட்டா கரோட்டீன் உள்ளதால், அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

** மாம்பழங்களில் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எனவே இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், இதயத் துடிப்பு சீராகும்.

** மாம்பழம் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. எனவே மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், மாம்பழக்கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வரலாம்.

** விட்டமின் சத்துக்கள் மாம்பழத்தில் அதிகமாக உள்ளதால், இது இதயநோய், நோய்த்தொற்று, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

** சர்க்கரை நோயை குணப்படுத்த, தூங்கும் முன் குடிக்கும் நீரில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து, மறுநாள் அந்த நீரை குடித்து வந்தால், சர்க்கரையை நோய் குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios