Food stomach to confirm body Keep in mind ...
ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியமானதாகும். நீங்கள் நன்றாக உணவு உண்டால் உடல்நலக் குறைவுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நீண்ட நேரத்துக்குக் களைப்பில்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உணவு மற்றும் சிற்றுண்டியை வழக்கமான நேரத்தில் சாப்பிடுவது நல்ல பழக்கம்.
அதன்படி பின்வறும் உணவு ஆத்திச்சூடியை உங்கள் வாழ்வில் எப்பவும் மறக்க வேண்டாம். கடைப்பிடித்து உடலை உறுதி செய்யுங்கள்…
1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
3. வாழை வாழ வைக்கும்.
4. அவசர சோறு ஆபத்து.
5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
6. ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.
7. இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
8. உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
9. கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
11. கொழுப்பு குறைக்க பன்னீர் திராட்சை.
12. சித்தம் தெளிய வில்வம்.
13. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.
14. சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
15. செரிமான சக்திக்கு சுண்டைக்காய்.
16. தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
17. தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை.
18. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.
19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
20. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
21. வாத நோய் தடுக்க அரைக்கீரை.
22. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
23. பருமன் குறைய முட்டைக்கோஸ்.
24. பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
25. குடல், புண் நலம் பெற அகத்திக்கீரை.
