புட்டப் பகுதிகளில் பருக்கள் பிரச்னை- அலட்சியம் காட்ட வேண்டாம்..!!
முகத்தில் தோன்றும் பருக்களும் புட்டப் பகுதியில் வரும் பருக்களும் ஒன்று என பலரும் கருதுகின்றனர். ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. புட்டப் பகுதியில் தோன்றும் பருக்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
உடலில் பல இடங்களில் பருக்கள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. குறிப்பாக முகத்தில் பருக்கள் தோன்றுவது, உடலளவிலும் வயது மாற்றம் காரணமாகவும் ஏற்படக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் இதை பலரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதேபோன்று உடலில் மற்ற பகுதிகளில் தோன்றக்கூடிய பருக்கள் குறித்தும் கவலை இருப்பது கிடையாது. எனினும் புட்டத்தில் தோன்றும் பருக்களை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. புட்டப் பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று காரணமாக பருக்கள் ஏற்படுவதாக மருத்துவர்கல் கூறுகின்றனர். இதை சரிப்படுத்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஈரமான உள்ளாடைகள் கூடாது
நம்மில் பலரும் குளித்து முடித்து வந்ததும், உடலை சரியாக துவட்டாமல் உள்ளாடைகளை அணிந்துகொள்வோம். இதனால் ஈரமான பகுதிகளில் எளிதாக பருக்கள், அரிப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். மேலும் நீண்ட நேரம் உள்ளாடைகளை போட்டிருந்தாலும், இதே பாதிப்புகள் தோன்றும். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் பாக்டீரியா, நுண்ணுயிர்கள் தோன்று இனப்பெருக்கத்துக்கு வழிவகுக்கும்.
பருக்களை சாதாரணமாக விடக்கூடாது
உடலின் மற்ற பகுதிகளை விடவும், புட்டம் பகுதியில் சூடு அதிகமாக இருக்கும். அப்போது பருக்கள் தோன்றுவிட்டால், அதை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. ஒருவேளை அப்படி செய்தால், பருக்களில் சீழ் பிடித்து கொப்பளங்களாக மாறிவிடும். இதனால் உள்ளுக்குள் பெரிதாக துவங்கும். இதனால் வலி ஏற்பட்டு, இன்னும் பெரிதாகி கொப்பளங்கள் உடைந்து போகும். இதன்காரணமாக மேலும் பாக்டீரியாக்கள் அதிகரித்து தொற்று உருவாகும் அபாயம் உள்ளது. அதை தவிர்த்து கொப்பளங்கள் மேலும் பரவ ஆரம்பிக்கும்.
நீண்ட நேரம் உட்காரக்கூடாது
இன்றைய காலத்தில் பலரும் பல மணிநேரம் அமர்ந்துகொண்டு வேலை செய்யும் நிலை உள்ளது. அதுவும் ஒரே இடத்தில், ஃபைமர் இருக்கைகளில் அமரிந்துகொண்டு பணி செய்யும் நிலையில் உள்ளனர். அதிகம் நேரம் இப்படியே உட்கார்ந்து இருந்து பணி செய்வதால், உடல் சூடும் அதிகரிக்கிறது. இதன்காரணமாக புட்டம் பகுதியில் உராய்வு மற்றும் எரிச்சல் அதிகரித்து புண் உருவாகிவிடுகிறது. இதன்மூலம் ஃபோலிகுலிடிஸ் என்கிற நுண்ணுயிர்கள் உருவாகி, அதனால் கொப்பளங்கள் மற்றூம் பருக்கள் உருவாகிறது. இதை உடனடியாக மருத்துவர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தளர்வான ஆடைகள் போதும்
உடல் அமைப்பு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இதுபோன்ற ஆடைகள் உங்களை அழகாகவும் ஸ்டைலாகவும் காட்டும் தான். ஆனால் உடல் சூடு அதிகரித்து பருக்கள் மற்றும் கொப்பளங்கள் உண்டாகி, உடல்நலனை பாதிக்கச் செய்யும். இது ஆண்களுக்கும் பொருந்தும். எப்போதும் உடலை தளர்வாக வைத்துக்கொள்ளும் ஆடைகளை அணிந்திடுங்கள். அதுபோன்ற ஆடைகள் சந்தைகளில் நிறைய கிடைக்கின்றன. நம்முடைய நாட்டின் தட்பவெட்ப நிலைக்கும், அதுதான் சரியாக இருக்கும்.
பருக்களை போக்க எளிய வழிகள்
புட்டப் பகுதிகளில் பருக்கள் அல்லது கொப்பளங்கள் தோன்றினால், உடனடியாக மருத்துவரைச் சென்று பாருங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பெரும்பாலும் அசிலிக் அமிலம் கொண்ட ஜெல்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது ஓரளவு பிரச்னையை கட்டுப்படுத்தும். எனினும் உடலை சுத்தமாக பராமரிப்பதும், குளிக்கும் போது சாலிசிலிக் அமிலம் மற்றும் டீ ட்ரி ஆயில் கொண்ட சோப்புகளை பயன்படுத்துவதும் இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்.