Five Simple Tips That You Should Follow

1.. மிளகு

உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும். அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.

2.. க்ரீன் டீ

க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.

3.. சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்

உணவுகளைத் தவிர்க்கவும் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை இரவில் படுக்கும் முன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்யும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களான உடலில் தேங்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை இரவில் மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் சாப்பிடக்கூடாது.

4.. நல்ல தூக்கம் அவசியம்

ஆம், உடல் எடையைக் குறைக்க நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். ஒருவர் சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால் தான் உடல் பருமனை அடைய நேரிடுகிறது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம் செய்தல், இனிமையான பாடல்களை கேட்டல், நல்ல வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

5.. நைட் டைம் ஜூஸ்

இரவில் படுக்கும் முன் எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, கற்றாழை போன்ற உடல் கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களால் செய்யப்பட்ட ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வர, உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம்.