நம் உடலில் உள்ள  அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் செயல்பட்டால் தான் நம் உடல் இயக்கம் சீராக இருகின்றது என்பதை  உணர முடியும்.

அதே சமயத்தில் சில நேரங்களில் சில பிரச்சனைகள்  வரத்தான் செய்யும். அதுபோன்ற  சமயத்தில்  நாம் செய்ய வேண்டியது  சில எளிய முறைகள் தான். அக்குப்ரெஷர் பற்றி நமக்கு தெரிந்திருக்கும்.இந்த பிரஷரை நம் கை விரல்களில் கொடுத்தால் சில பிரச்சனைகள் மறைந்து  போகும்.

அதாவது 1 நிமிடத்திற்கு கை விரல்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்தெந்த விரல்களில் அழுத்தம்   கொடுத்தால், எந்த நன்மைகள் பெற முடியும் என்பதை பார்க்கலாம்

பெருவிரல் – சுவாச பிரச்னை,ஒழுங்கற்ற இதய துடிப்பு இவை இரண்டும் சரியாகிவிடும்.காரணம்  பெருவிரல் இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்புடைய  ஒன்று.

ஆள்காட்டி விரல் – மண்ணீரல்  மற்றும்  குடலுடன் தொடர்புடையது என்பதால், செரிமான பிரச்னை  மற்றும் மலசிக்கல்  பிரச்னை  சீராகி விடும்

நடுவிரல் – பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை தடுக்கும். தூக்கமின்மை சரியாகி விடும்

மோதிரம் மற்றும் சுண்டு விரலை ஒருசேர பிடித்து அழுத்தம் கொடுத்தால், ஒற்றை தலைவலி மற்றும் கழுத்து வலியிலிருந்து விடுபட முடியும்

உள்ளங்கையில் அதிக அளவில் நரம்புகள் இணைந்திருப்பதால்,அழுத்தம்கொடுக்கும் போது, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பெற முடியும்