Asianet News TamilAsianet News Tamil

மூளையின் செயற்திறனை ஊக்குவிக்க இந்த எளிய உணவை ஒரு மாதம் சாப்பிடுங்கள்...

Eat this simple meal a month to encourage brain efficiency ...
Eat this simple meal a month to encourage brain efficiency ...
Author
First Published Apr 12, 2018, 12:25 PM IST


இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

** இஞ்சியை தொடர்ந்து 30 நாட்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், செரிமானம் மற்றும் வாயுக் குழாய் கோளாறுகளை சரிசெய்து செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

** குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சியை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்விற்கு, தினமும் 1.5 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.

** அன்றாட உணவில் இஞ்சியை சிறிதளவு சேர்த்துக் கொள்வதால், தசை வலிகளை குறைத்து, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.

** மூட்டு பகுதிகளில் அழற்சி, மூட்டு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மூட்டு வலி இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க இஞ்சி சிறந்த நிவாரண மூலப்பொருளாக பயன்படுகிறது.

** இதய நோய் அபாயத்தை குறைப்பதில் இஞ்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

** கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் 45 நாட்கள் அன்றாட உணவு முறையில் 3 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் குறைத்துவிடும்.

** இஞ்சியில் உள்ள 6- Gingerol எனும் மூலப்பொருள் புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகும். எனவே தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்தால், அது புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை தடுக்கிறது.

** இஞ்சியில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் மூளையின் செயற்திறனை ஊக்குவித்து, மூளையின் ஆரோக்கியத்தை பலவகையில் மேம்படுத்த உதவுகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios