Asianet News TamilAsianet News Tamil

வறண்ட சருமமா? இந்த எண்ணெய்யைத் தேயுங்கள்…

dry skin-try-this-oil
Author
First Published Jan 2, 2017, 2:16 PM IST


எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை விட வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகும். ஏனெனில் எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை குளிர் மற்றும் வெயில் அதிகமாக தாக்காது.  ஆனால், வறண்ட சருமத்தின் மேல் நேரடியாக இயற்கை காரணிகளான தூசு, வெப்பம், குளிர் ஆகியவைகள் தாக்கிவிடும்.

மேலும், வறண்ட சருமத்தினால் கொப்புளங்கள் எளிதில் தாக்கிவிடும். மேலும் தேமல் போன்றவைகள் ஏற்படும். எண்ணை சருமம் உள்ளவர்கள் தோலின் மீது எண்ணை ஒரு படலமாக இருந்து சருமத்தை இவைகளிடமிருந்து பாதுகாக்கும்.

இதனால் குளிர் காலங்களில் வறண்ட சருமம் தோல் உரிவது போன்று தோன்றும். தோலின் மீது தேங்காய் எண்ணை தடவி இரவில் தூங்கினால் இந்த பாதிப்பில் இருந்து மீளலாம்.

நகத்தால் உடலில் மேற்பகுதியில் சொரண்டினால் வெள்ளையாக தெரிகின்றதா அப்படியென்றால் அது வறண்ட சருமத்தின் பாதிப்புதான்.  அப்படி தோல் உள்ளவர்கள் எண்ணைப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்து (விளக்கெண்ணெய்) குளிக்க வேண்டும். அதனால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி வரும் மேலும் எண்ணைப்பிசுபிசுப்பு தோலில் வரும்.

தக்காளிச்சாறு மற்றும் வெள்ளிரிச்சாறு ஆகியவற்றை நன்கு மசித்து முகத்திற்கு பூசிவிட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும்.   பின் முகத்தை கழுவிவிடவும்.  

கண்ட கண்ட கிரீம்களை போட வேண்டாம்.  

முகத்திற்கு கெட்டித் தயிரே போதுமானது. அதை முகத்தில் பூசிவிட்டு காயவைத்து கழுவிவிட்டால் போதும். சருமம் நன்றாக இருக்கும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios