Asianet News TamilAsianet News Tamil

முருங்கையின் மருத்துவ குணங்கள்…

drumsticks medicinal-qualities
Author
First Published Dec 9, 2016, 12:35 PM IST


முருங்கையை "பிரம்ம விருட்சம்" என்றே  அழைத்திருகின்றனர் சித்தர்களாகிய நமது தமிழர்கள்..

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இவ்உலகில் இல்லை என்றே கூறலாம். முன்பெல்லாம் முருங்க மரம் இல்லாத வீடுகளை பார்க்கமுடியாது. ஏன்னென்றால்  வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். முருங்கையில் அளவுக்கதிகமான பயன்கள் இருபதனால் தான் அவ்வாறு செய்தனர்.ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

முருங்கையில்  இலை, காய், பூ, பிஞ்சு,  விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும்  மருத்துவக் குணங்கள் அடங்கியது. முருங்கையில் கழிவு என்பதே இல்லை எனலாம்

முருங்கையை தினமும் உணவில் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைகின்றது. முருங்கையில் உள்ள  கீரை, காய், பூ வேர் என அனைத்தையும் சமைத்து உன்னலாம். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளில் முருங்கையும் ஒன்று.

முருங்கை கீரையை சாப்பிடுவதால் நமது ஞாபக சக்தி அதிகரிக்கும். முருங்கை கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

கண் பார்வைகோளாறு உடையவர்கள் முருங்கை பூவை சாப்பிடுவதால் கண் பார்வைகோளாறு சரியாவதை உணரலாம். ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.முருங்கைப் பூ கஷாயம் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும், உடல் அசதி நீங்கிம். உடல் நிலை சீராகும்.

தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் முருங்கை காயை சாப்பிடுவதால் தாது புஷ்டி ஏற்படும். இதனால் தாம்பத்ய உறவில் நாட்டம் ஏற்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios