Does your beauty hurt your skin? Here the solution ...
கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம்.
இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.
காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம் வடியும். கருமை மறையும்.
கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது. தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும்.
சிலருக்கு ஸ்ட்ரெஸ்சின் காரணமாக கருவளையங்கள் வரும். பன்னீரில் நனைத்துப் பிழிந்த பஞ்சை கண்களின் மேல் வைத்து எடுக்கலாம்.
புருவங்களின் மேல் விளக்கெண்ணெய் தடவி வந்தால், அவை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். கண்களின் அழகு எடுப்பாகத் தெரிய வேண்டுமென்றால் புருவங்களை ஷேப் செய்யலாம்.
