Does the soap you use really clean yourself?
எந்த சோப்பை பயன்படுத்துவது, சாதாரணா சோப்பா? அல்லது ஆன்டி - பாக்டீரியா சோப்பா? என்ற கேள்வி உங்களுக்குள் எப்போதாவது எழுந்ததுண்டா.
விடை இதோ. சாதாரணா சோப்போ அல்லது ஆன்டி - பாக்டீரியா சோப்போ ஒரே நிறுவனம் இரண்டு விளம்பரங்களின் மூலம், இரண்டு வகையான சோப்பையும் நம்மை ஏமாற்றி விற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
அதிர்ச்சி வேண்டாம். விளம்பரங்கள் ஓர் மாய உலகம். எல்லா சோப்பும் ஒன்று தான்.
ஆன்டி- பாக்டீரியா சோப்பு. இதில் கை கழுவினால் பத்து வினாடிகளில் சுத்தம் செய்துவிடும். சாதாரண சோப்பு ஓர் நிமிடம் எடுத்துக் கொள்கிறது என என்னதான் விளம்பரம் செய்தாலும் கூட, உண்மையில் எல்லாமே ஒரே மாதிரியான விளைவுகளை தரக் கூடியது. அதுவும் ஆபத்தான விளைவுகளை.
விளம்பரம் முற்றிலும் பொய்யானது இந்த சோப்பு மூலம் 99.99% பாக்டீரியாக்களை அழிக்க முடியும் என்று கூறி, ஓர் மூலையில் ஒரு கருப்பு புழு நெளிவதை விளம்பரத்தில் காண்பிப்பார்கள். ஆனால், சாதாரண சோப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியா சோப்புக்கு இடையில் வாசனை திரவியமும், உருவம் மற்றும் தான் வேறுப்படுகிறது.
டிரைக்ளோசான் என்பது ஆன்டி-பாக்டீரியா சோப்புகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மூலப்பொருள் ஆகும். இவை 20 வகையான பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது என்று சொல்கிறது விளம்பரம்.
உண்மையில், சாதாரண சோப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியா சோப்பு இரண்டையும், 16 ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருந்த மக்களிடையே பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், இரண்டு சோப்பும் எந்த மாறுப்பட்ட தீர்வையும் தரவில்லை. இரண்டும் ஒரே மாதிரியாக தான் பயனளிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
ஹார்மோன் பிரச்சனைகள் ஆன்டி-பாக்டீரியா சோப்புகளில் பயன்படுத்தப்படும் டிரைக்ளோசான் எனும் மூலப் பொருளினால் ஆண்டிபயாடிக் தடுப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் வருகிறது என்றும் இந்த ஆராய்ச்சியின் மூலம் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வறிக்கை வெளியீடு இந்த ஆராய்ச்சியின் ஆய்வறிக்கை ஆன்ட்டிமைக்ரோபியல் கீமோதெரபி ஜர்னல் (Journal of Antimicrobial Chemotherapy.) என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
