Breastfeeding: தாய்ப்பால் கொடுத்தால் டைப் 2 நீரிழிவு நோய் குறைய வாய்ப்புள்ளதா?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளது. 

Does Breastfeeding Reduce Type 2 Diabetes?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் பல பலன்கள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது இருவருக்கும்  இடையில் ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது. அதே சமயத்தில், பிறந்த குழந்தையை ஒவ்வாமை மற்றும் பிற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளது. வைரஸ் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க குழந்தைக்கு தேவையான ஆன்டிபாடிகளும் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுப்பதால், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த முடியும் என்று  எத்தனை பேருக்குத் தெரியும். கடந்த காலத்தில் சர்க்கரை நோய் ஏதுமின்றி, ஏறக்குறைய 40 லட்சம் இந்தியப் பெண்கள், கர்ப்பகால சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வாழ்க்கையில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்துகள் உள்ளது. ஆனால், இந்த ஆபத்தை குறைக்கக்கூடிய ஒன்று தான் தாய்ப்பால். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் தாய்ப்பால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்

குழந்தையை அக்கறையோடு பராமரிப்பதற்கும், தாய்-சேய் பிணைப்பை உருவாக்குவதற்கும் தாய்ப்பால் மிகச் சிறந்த வழியாகும்.

ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய், முடக்கு வாதம், டைப் 2 நீரிழிவு, கர்ப்பத்திற்குப் பிந்தைய உடல் எடை இழப்பு, மார்பக புற்றுநோய், யுட்ரின் (uterine) புற்றுநோய் மற்றும் கருப்பை (ovarian) புற்றுநோய் உள்பட பெண்களுக்கு ஏற்படும் பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புகள் தாய்ப்பால் கொடுப்பதால் குறைகிறது.

உடல் நலன் மட்டுமின்றி, பிரசவத்திற்குப் பிறகு மனச்சோர்வை நிர்வகிப்பதில் தாய்ப்பால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

தாய்ப்பால் கொடுக்கும் போது ஆக்ஸிடாஸின் எனும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. இது தாயின் மனநிலையை மேம்படுத்துவதோடு, புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் மனச்சோர்வு அபாயத்தை முற்றிலுமாக குறைக்கிறது.

Diwali Legiyam: தீபாவளி திண்பண்டங்களால் உண்டாகும் செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும் சூப்பரான லேகியம்!

நீரிழிவு ஏற்படுவதை எப்படி தடுக்கிறது?

தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் திரும்புவதை அடக்க உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் சமயத்தில், ​​நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு (low blood sugar) குறையலாம். ஆகவே, குழந்தைகளுக்கு பாலூட்டும் நேரத்தில் குளுக்கோஸை அருகில் வைத்திருப்பது மிக நல்லது.

நீரிழிவு நோயுடன் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் சவாலானது.  ஏனென்றால் பெண்களுக்கு மார்பகங்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலைக்கு மாஸ்டிடிஸ் (mastitis) என்று பெயர். மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவதனைத் தடுக்க தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு மார்பகங்களிலிருந்தும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த பெண்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவையும் சரிபார்க்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது பாலின் தரத்தை பாதிக்கிறது. பால் உற்பத்தி செய்யும் திறனும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios