Do you want to stop smoking? Then eat bananas ...
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.
வாழைப்பழத்தில் வைட்டமின் `ஏ’, வைட்டமின் `பி’ 6, வைட்டமின் `சி’, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
** அலர்சி
அலர்சியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்சி ஏற்படுவதைத் தடுக்கும்.
** ரத்த சோகை
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
** மலச்சிக்கல்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.
** வயிற்றுக்கடுப்பு
மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
** தலை பாரம்
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.
** புகைப்பிடித்தலை நிறுத்த
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
** மன அழுத்தம்
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
** குடல் கோளாறு
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.
** மூளை செயல்பாடு
பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.
** சிறுநீரக பிரச்சனை
வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும். அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 89 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும்.
** மாதவிடாய் பிரச்சனை
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால்,அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான ரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான ரத்தப் போக்கு குறையும்.
** எடை குறைய
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.
** இதய நோய்
வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
** சிறுநீர் கோளாறு
வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜுஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி.
இதுபோன்று உடலில் ஏற்படும் அசாதாரண கோளாறுகளை நீக்கவல்ல வாழைப்பழத்தை தினமும் உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
