Do you want to lick dry lips? Read this

கோவைப்பழ உதடுகள் தானே இயல்பான உதடுகளுக்கு எடுத்துகாட்டு.

அப்படி வறண்டு போன உதடுகளை, கோவைப்பழ உதடுகளாக்குவது எப்படி?

1.. வெண்ணெய்:

வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.

2.. கொத்துமல்லி

கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

3.. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

4.. பீட்ரூட்

பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.

இப்படி செய்துவந்தால் சில நா:களில் உங்கள் உதடுகள் இயற்கையாகவே சிவப்பாக ஆகிவிடும் பாருங்களேன்!