நமக்கு ஜலதோஷம் பிடித்தாலோ அல்லது தூசு மூக்கின் துளைவழியாக உள்ளே சென்றுவிட்டாலே அதை வெளியேற்ற தும்மல் வரும்.

இந்த தும்மல் என்பது 160 கிலோமீட்டர் வேகத்தில் நம் உடலில் இருந்து வெளியேறும் காற்று. இது சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள், சளி அடைப்புகள், தூசுகள் ஆகியவற்றை அகற்ற போதுமானது.

இந்த வேகத்தில் ஒரு காற்று நம்மை தாக்கினால் நம் விலா எலும்புகள் உடைந்துவிடும்.  தும்மல் வரும் போது கைக்குட்டை அல்லது கைகளை கொண்டு நமது மூக்கை மறைத்துக் கொண்டு தும்மி விடவேண்டும்.  எந்தக் காரணம் கொண்டும் அடைக்கக்கூடாது.

அவ்வாறு கைகளைக் கொண்டு மூக்கின் துளையை அடைப்பதால் உருவான காற்று நேரடியாக காதுக்கு வரும் காதுக்களில் உள்ள சவ்வினை அழுத்தும்.  இதனால் காதில் வலி ஏற்படும்.  சில சமயம் காது கேளாமல் போகவும் வாய்ப்புண்டு.  காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.

மூளைக்கு இந்த தும்மல் அதிவேகத்தில் செல்லும் போது அங்குள்ள சிறு நரம்புகள் வெடித்துவிட வாய்ப்புண்டு.  

இரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும்.  

தும்மல் நேராக சென்று தலைவலியை ஏற்படுத்திவிடும்.

தும்மலை அடைக்கும் போது அந்தக் காற்று கண்களுக்கும் செல்லும்.  கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை பாதிக்கும்.

மாரடைப்பு உள்ளவர்களுக்கு இதயத்தை பாதிக்கவும் செய்யும்.

தும்மல் என்பது இயற்கை உபாதைதான் இதை பொது இடங்களில் மறைக்க வேண்டாம். தும்மல் வெளிவந்துவிட்டால் நமக்கு நன்மையே தரும்.  இனிமேல் தும்மலை அடைக்க வேண்டாம்.