Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் சி புற்றுநோய் கட்டிகளை உடைக்கும்…

Do you know Vitamin C breaks down cancer tumors ...
Do you know Vitamin C breaks down cancer tumors ...
Author
First Published Jul 21, 2017, 1:36 PM IST


வைட்டமின் சி-யினால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிபிளவர் போன்றவற்றில் இருக்கிறது.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி-யை உணவின் மூலம் தான் பெற முடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது.

அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும்.

நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்டமின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.

வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது. அதிகளவு வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் புற்றுநோய் கட்டி உடையத் தொடங்குகிறது என்றும், அதன் பின் ரோடியோ தெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios