Do you know urad dall gives strength to the hip bones
இடுப்பு எலும்பு வலிமை அடைய உளுந்துகளி
உளுந்துக் களி செய்ய தேவையானவை:
பச்சரிசி – கால் கிலோ,
கறுப்பு உளுந்து – 100 கிராம்,
மிளகு – 20,
சீரகம் – கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் & 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும்.
பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, மாவை சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும்.
களிப் பதம் வந்ததும் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
இந்தக் களி, கருப்பட்டிப் பாகில் தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்.
உளுந்து களியால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்:
** இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக, பெண்கள் வயதுக்கு வரும்போது இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம்.
** பிரசவத்தை எதிர்கொள்ளும்போது இடுப்புக்கு வலு சேர்ப்பதற்காக இதைப் பெண்களுக்கு செய்து கொடுப்பர்.
** கை, கால், முதுகில் ஏற்படும் வலியையும் போக்கும்.
