நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால் நோய்த் தொற்றுக்கள் அதிகரித்து பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகக்கூடும். எனவே உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்வது அவசியம்.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள இதை சாப்பிட்டாலே போதும்...

தேவையான பொருட்கள்

பூண்டு பற்கள் – 8

தேன் – 200 மிலி

ஆப்பிள் சீடர் வினிகர் – 200 மிலி

செய்முறை

முதலில் பூண்டின் தோலை நீக்கிவிட்டு, பூண்டு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, மூடி 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனால் தினமும் மறக்காமல் அந்த கண்ணாடி பாட்டிலைத் திறந்து அந்த கலவையை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து விட வேண்டும்.

குடிக்கும் முறை

இந்த லேகியத்தை ஒரு நாளைக்கு 2 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்

நமது உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரிப்பதால், நோய்த் தொற்றுக்களின் அபாயம் குறையும்.

ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடிப்பதால், அதன் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உட்பொருட்கள் நோய்க் கிருமிகளின் தாக்கத்தை குறைத்து, சிறுநீரக கற்களைக் கரைக்கிறது.