சில ஜூஸ்களும் அவற்றால் கிடைக்கும் மருத்துவ நன்மைகளும்...

மாதுளை + திராட்சை ஜூஸ்

இந்த ஜூஸை ஒருவர் காலை உணவின் போது குடிப்பது மிகவும் நல்லது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். இந்த ஜூஸ் உடன் சிறிது மிளகுத் தூள் அல்லது உப்பு சேர்த்துக் கொண்டால், இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

சுரைக்காய் + பாகற்காய் + இஞ்சி + புதினா ஜூஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பானம் மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த பானத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். எனவே இந்த பானத்தை சர்க்கரை நோயாளிகள் ஒரு முறையாவது குடிக்க வேண்டியது அவசியம்.

புதினா + கேரட் + மாதுளை +  இஞ்சி ஜூஸ்

இந்த ஜூஸ் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதோடு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவி புரியும். இந்த பானத்தில் இருக்கும் மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை உள்ளது மற்றும் இதில் உள்ள கேரட் தான் உடலை சுத்தம் செய்யும் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கிறது.

கொத்தமல்லி + புதினா + வெள்ளரிக்காய் +  பாகற்காய் ஜூஸ் 

ஒரு நாள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், இந்த ஜூஸைக் குடித்து ஆரம்பியுங்கள். இதில் உள்ள காய்கறிகள் உடலில் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிப்பதோடு, நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே இந்த பானம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்றது எனலாம்.

பீட்ரூட் +  மாதுளை + வெள்ளரிக்காய் ஜூஸ் 

இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு, இந்த ஜூஸ் சிறந்தது. ஏனெனில் இந்த பானத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அதோடு, இரும்புச்சத்தை உறிஞ்சத் தேவையான வைட்டமின் சியும் இருப்பதால், இதைக் குடித்தால், உடலில் இரும்புச்சத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும். இந்த ஜூஸை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது குடிக்க வேண்டியது அவசியம்.