Do you know There are six tempting ways to get rid of men bald head problem ...
ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை வழுக்கை தலை. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும்.
அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும்.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.
சரி! ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை தலையைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்..
1.. ஆயில் மசாஜ்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
2.. தேங்காய் பால்
தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
3.. மருதாணி இலைகள்
மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.
4.. நெல்லிக்காய்
முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.
5.. வெந்தயம் வெந்தயம்
உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.
6.. வெங்காய சிகிச்சை
வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
