Do you know The thin layer of the skin around the lid is ...

இன்று ஹெர்பல் என்ற பெயரைப் பயன்படுத்தி நிறைய காஸ்மெடிக்ஸ் வருகின்றன. ஹெர்பல் என்றாலே, எந்தப் பக்கவிளைவும் இருக்காது என மக்களும் நம்பி வாங்குகின்றனர். 

ஹெர்பல் என்ற பெயரில் வரும் கிரீம், சோப்பு, ஷாம்புகளில், 70 சதவிகிதம் வரை கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. ரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் செய்யப்படும் அழகுப் பராமரிப்புக்களை வீட்டிலேயே செய்துகொள்வது நல்லது.

** அழுக்கை நீக்காமல் சருமத்தை அழகுபடுத்த முடியாது. எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர்விட்டு, பஞ்சினால் முகத்தை நன்றாகத் துடையுங்கள். அழுக்கு பெரும்பாலும் நெற்றி, மூக்கு இடுக்குப் பகுதிகளில் அதிகம் படரும். மூலிகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், மஞ்சட்டி ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து 200 மி.லி நீரை கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். 

** இதைக்கொண்டு முகத்தைத் துடைக்கலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் மஞ்சட்டிக்குப் பதில், நன்னாரி அல்லது வெட்டிவேரில் இதுபோல் தயாரித்து, முகத்தில் தடவி மசாஜ் செய்தால், சருமம் சுத்தமாகும்.

** தோலில் பதிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும்முறை இது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழத் தோல்களை காயவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தோல்களைத் தனியாகவும் அரைத்துப் பயன்படுத்தலாம். 

** பழத்தோலுடன் சமஅளவு கிச்சலிக் கிழங்குப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் போல ஆக்க வேண்டும். இதை, முகம் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் இருப்பவர்கள், இதை மாதம் ஒரு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

** லாக்‌ஷாதி தைலம், ஏலாதி தைலம், குங்குமாதி தைலம் என ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கலந்து காய்ச்சப்பட்ட எண்ணெயைக்கொண்டு முகத்துக்கு ஆயில் மசாஜ் செய்யவேண்டும். 

** நல்லெண்ணெயும் நல்ல பலன் தரும். தினமும் 10 நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்துவந்தால், ஒட்டிய கன்னம் உப்பும். கண்ணைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மறையும். இளமையாக இருக்கவைக்கும். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் எண்ணெய் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். வறண்ட சருமத்தை வழுவழுப்பாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பொலிவுகூடும். முகத்தில் கருமை, திட்டுக்கள் நீங்கும்.

** சிவப்பு அல்லது கறுப்புப் புட்டரிசியை ரவை மாதிரி உடைத்து, கஞ்சி போல் காய்ச்சிக்கொள்ள வேண்டும். கேரளாவில் கிடைக்கும் நவரா அரிசியையும் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மஞ்சிஸ்டாதி கஷாயத்துடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். 

** காய்ச்சிய கஞ்சியை காடாத் துணியில் சிறிய மூட்டைகளாகக் கட்டி, பாலில் தொட்டு முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் செய்தால்போதும். சருமத்தின் இழந்த பொலிவை மீட்டு, நிறுத்தை அதிகரிக்கும். மேலும், சருமத் துளைகள் திறக்கும். வியர்வையை வரவழைக்கும். 

** இதனால், பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் இளகி, வெளியில் வந்துவிடும். கறுப்பு, சிவப்புப் புட்டரிசி வாங்க முடியாதவர்கள், கோதுமையை வேகவைத்து இதே போல் செய்யலாம்.

** எலுமிச்சைச்சாற்றுடன் இரண்டு மடங்கு தேன் கலந்து, பருத்திப் பஞ்சில் தோய்த்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அல்லது, ரோஸ் வாட்டரை ஐஸ்கட்டி போல் தயார் செய்து, ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க சருமத் துளைகள் மூடிக்கொள்ளும். 

** ஆயுர்வேதத்தில் தேனை ‘யோகவாகி’ என்பார்கள். எந்த மருந்துடன் தேனை கலக்குகிறோமோ, அந்தப் பொருட்களின் குணத்தை மேம்படுத்தும். எலுமிச்சையுடன் சேரும்போது, இன்னும் சருமத்தைப் பொலிவாக்கும்.

** வைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டும் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம். முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். 

** இதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.

** முல்தானி மட்டியுடன் மஞ்சிஸ்டா கஷாயத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பிரஷ் பயன்படுத்தி, முகத்தில் பேக் போட வேண்டும். பரு, தழும்பு இருந்தால் வெட்டி வேர் கஷாயத்துடன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்துக்கொள்ளலாம். இமைகளுக்கு மேல் இந்த பேக் போடக் கூடாது. 

** ஏனெனில், கண்ணைச் சுற்றி இருக்கும் தோலை மேலும் இறுக்கமாக்கிவிடும். முட்டையின் மஞ்சள் கரு கொலாஜன் தன்மைகொண்டது. 40 வயதுக்கு மேல் டபுள் சின், சுருக்கங்கள் இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம்.