Do you know Swimmers will be able to reach the height of our body ...

உயரம் அதிகரிக்க இதெல்லாம் பண்ணாலே போதும்...

** தொங்குவது:

இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

** கோப்ரா ஸ்ட்ரெச்சிங்:

கோப்ரா ஸ்ட்ரெச்சிங் பயிற்சி உங்கள் தண்டுவடத்தை நீட்டிக்க உதவிகிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகரிக்கும். கைகளை கீழே ஊனி, உங்கள் தோள்பட்டையை மட்டும் முடிந்த வரை மேல் உயர்த்த வேண்டும். உங்கள் முகம் நேராக பார்த்திருக்க வேண்டும்.

** ஸ்கிப்பிங்க்:
உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம். இது உடலுக்கு வலிமையையும் தருகிறது. மேலும் உடலில் உள்ள தேவையில்லாத சதை குறைத்து உடலை கட்டுக்குள் வைக்கிறது.

** நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.