துளசியின் மருத்துவ குணங்கள்:

தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள் துளசியைத் தலையணையில் வைத்துத் தூங்கினால் பேன்கள் தலையை விட்டு நீங்கி விடும்.

நீரிழிவு நோய்க்கு துளசி நல்ல மருந்து. துளசியைக் கழுவி நீரில் ஊற வைத்து அந்த நீரைப் பருகினால் நீரிழிவு நோய் எட்டிப் பார்க்காது. அது போல் காலையில் துளசி இலையை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு சுத்தம் செய்து மென்று வந்தாலும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம்.

வியர்வை நாற்றம் இருந்தால் துளசி இலையை முதல் நாள் தண்ணீரில் கசக்கிப் போட்டு மறு நாள் குளித்து வர வியர்வை நாற்றம் உடலிலிருந்து அகலும்.

துளசி இலைகளை மென்று தின்றாலும் வியர்வை நாற்றம் போகும்.

படைபத்து முதலிய சரும நோய்களுக்குத் துளசிச் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் குணம் கிடைக்கும்.