ஆரோக்கியம் என நினைத்து நாம் சாப்பிடும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் தீங்கு தான் விளைவிக்கின்றன...

பெரும்பாலான கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். 

அந்த ஸ்டிக்கரில் உள்ள எண் 3 அல்லது 4 என்ற இலக்கத்தில் தொடங்கினால் அதில் பூச்சிகொல்லிகள் மற்றும் இரசாயன மருந்துகள் கலந்திருப்பதாக அர்த்தம்.

இதுவே, ஸ்டிக்கரில் 9 என்ற நம்பரில் எண் ஆரம்பித்தால் அது இயற்கையாக விளைக்கப்பட்ட பழம் மற்றும் காய்கறி என அர்த்தமாகும். இது உடலுக்கு நல்லது. 

அதேபோல 8 என்ற நம்பரில் தொடங்கும் எண் ஸ்டிக்கரில் இருந்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் GMO வகையை சார்ந்ததாகும். இந்த வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இயந்திரங்களில் தயாராகிறது என அர்த்தமாகும்.

அடுத்த முறை பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும்போது இதை நினைவில் வாங்கி சாப்பிடுங்கள்.